search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீக்கியர் தாக்குதல்"

    அமெரிக்காவில் ஒரேகான் மாகாணத்தில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல் நடத்திய வெள்ளைக்கார வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். #Racistattack
    நியூயார்க்:

    அமெரிக்காவில் ஒரேகான் மாகாணத்தில் ஹர்விந்தர்சிங் டாட் என்ற சீக்கியர் குடும்பத்துடன் தங்கியுள்ளார். அங்குள்ள ஒரு கடையில் பணிபுரிகிறார்.

    நேற்று முன்தினம் அவர் பணியில் இருந்தார். அப்போது அங்கு ஆண்ட்ரூ ராம்சே என்ற 24 வயது வெள்ளைக்கார வாலிபர் வந்தார். அவரிடம் சிகரெட் தயாரிக்க ரோலிங் பேப்பர் கேட்டார். அதற்கான அடையாள அட்டை இல்லாததால் அவர் தர மறுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர் ஹர்விந்தர் சிங்கிடம் தகாதமுறையில் நடந்து கொண்டார். அவரது தாடியை பிடித்து இழுத்து முகத்தில் குத்தினார். தொடர்ந்து அடித்து உதைத்து கீழே தள்ளினார். அவரது முகத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. இருந்தும் அவர் விடவில்லை. தொடர்ந்து இனவெறி தாக்குதலில் ஈடுபட்டார்.

    தகவல் அறிந்ததும் அங்கு போலீசார் விரைந்து வந்துனர். அதற்குள் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவர் மீது இனவெறி தாக்குதல் பிரிவில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.  #Racistattack
    அமெரிக்காவில் சீக்கியர் மீது இனவெறித் தாக்குதல் நடத்திய நபர்கள், அவரை இந்தியாவிற்கு திரும்பி போகும்படி மிரட்டி உள்ளனர். #SikhManBeaten #USHatecrime #USRacialAttack
    நியூயார்க்:

    அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மீது சமீபகாலமாக இனவெறித் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக  சீக்கியர்கள் அடிக்கடி தாக்கப்படுகின்றனர். முஸ்லிம் என நினைத்து சீக்கியர்களை தாக்கி அவமதிக்கின்றனர்.



    இந்நிலையில் கலிபோர்னியாவில் வசித்து வரும் 50 வயது நிரம்பிய சீக்கியர் ஒருவர் மீது 2 வெள்ளையின நபர்கள் இனவெறித்  தாக்குதல் நடத்தி உள்ளனர். அவரை கடுமையாக தாக்கி கீழே தள்ளியதுடன், ‘உன்னை யாரும் இங்கே வரவேற்கவில்லை, உன்னுடைய நாட்டிற்கு திரும்பி போ’ என்றும் அந்த நபர்கள் மிரட்டியுள்ளனர். அத்துடன் அவரது வாகனம் மீது பெயிண்டை ஸ்பிரே செய்துள்ளனர். காயமடைந்த சீக்கியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

    கடந்த வாரம் கேயாஸ் மற்றும் பூட்டே சாலை சந்திப்பின் அருகே உள்ளூர் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். #SikhManBeaten #USHatecrime #USRacialAttack 
    ×